தனியார் துறை வங்கிகளில் ஒன்றான லட்சுமி விலாஸ் வங்கி கரூரை தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது. 1926ல் நிறுவப்பட்டது. 1958 ஆகஸ்டில் ஷெட்யூல்டு வங்கியாக அறிவிக்கப்பட்டது. தற்சமயம் இந்த வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. நவீன மய மற்றும் வாடிக்கையாளரை மையப்படுத்திய சேவைகளுக்காக இந்த வங்கி அனைவராலும் அறியப்படுகிறது. இந்த வங்கியில் காலியாக உள்ள கிளரிக்கல் மற்றும் புரொபஷனரி அதிகாரி காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது: கிளரிக்கல் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 20 முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். புரொபஷனரி அதிகாரி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 20 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: புரொபஷனரி அதிகாரி பதவிக்கு ஏதாவது ஒரு பட்டப்படிப்பை 60 சதவீத மதிப்பெண்ணுடன் முடித்திருக்க வேண்டும். கிளரிக்கல் பணிக்கு இன்ஜினியரிங் அல்லாத பட்டப்பிடிப்பை 55 சதவீத மதிப்பெண்ணுடன் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்ச்சி முறை: இரண்டு பதவிகளுக்குமே ஆன்-லைன் முறையிலான எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் தேர்ச்சி இருக்கும். புரொபேஷனரி அதிகாரி பதவிக்கு கூடுதலாக குழுவிவாதம் இருக்கும்.
தேர்வு மையங்கள்: தமிழகத்தின் சென்னை, கோவை, சேலம், மதுரை மற்றும் கரூர் மையங்களில் எழுதலாம். இது தவிர நாட்டின் பல்வேறு மையங்களிலும் இதே தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் 600 ரூபாய்.
கடைசி நாள்: 2016 மார்ச் 1.
முழு விபரங்களுக்கு: www.lvbank.com/careers.aspx

No comments:
Post a Comment