Monday, 8 February 2016

தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கியில் பணி


தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 19 உதவியாளர் பணியிடங்களுக்கு வங்கி விதி மற்றும் அரசு விதிகளின்படி தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது: விண்ணப்பதாரர்கள் 01.01.2015 அன்று 21 வயது பூர்த்தியானவராக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு உச்ச பட்ச வயதில் சில சலுகைகள் உள்ளது. முழு விபரங்களுக்கு இணையதளத்தை பார்க்கவும்.
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
இதனுடன் கூட்டுறவு பயிற்சி அல்லது கூட்டுறவு பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும். கூட்டுறவில் பட்டப்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மூலம் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
விண்ணப்பக் கட்டணம்: தேர்வுக் கட்டணம் 200 ரூபாய். இதனை NEFT முறையிலும் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்ப படிவத்தை www.taicobank.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களை டவுண்லோடு செய்து கொள்ளலாம். விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து, உரிய இணைப்புகளுடன் சேர்த்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள் 2016 பிப்., 15.
Managing Director,
Tamilnadu Indistrial Co-op Bank Ltd.,
No.36, South Channel Canal Road,
Raja Annamalaipuram, Mandavelipakkam,
Chennai 600 028.
http://taicobank.in/Website21012016.pdf

No comments:

Post a Comment