Wednesday, 3 February 2016

சி.ஆர்.பி.எப்.,பில் ஸ்டெனோ ஆக வாய்ப்பு

நமது நாட்டின் முக்கிய துணை ராணுவப் படைகளில் ஒன்றுதான் சி.ஆர்.பி.எப்., எனப்படும் சென்ட்ரல் ரிசர்வ் போலீஸ் போர்ஸ் படை. தேர்தல் உள்ளிட்ட முக்கிய நேரங்களில் இதன் பங்கு அளப்பரியது. நமது நாட்டின் முக்கிய தருணங்களில் சட்டம், ஒழுங்கைக் காப்பதில் இதற்கு தனி இடம் உண்டு. இந்தப் படையில் அசிஸ்டென்ட் சப்-இன்ஸ்பெக்டர் பிரிவைச் சேர்ந்த ஸ்டெனோ பணியிடங்கள் 229ஐ நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது: மார்ச் 2016 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 18 முதல் 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பிளஸ் 2வுக்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும். பத்தாம் வகுப்பை முடித்துவிட்டு 2 அல்லது 3 வருட டிப்ளமோ படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
சிறப்புத் தகுதி: ஸ்டெனோ பதவி என்பதால் இப்பிரிவில் கூடுதல் தகுதி தேவைப்படும். முழுமையான தகவல்களுக்கு இணைய தளத்தைப் பார்க்கவும். உயரத்தை பொறுத்தவரை ஆண் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 165 செ.மீ.,; பெண்கள் 155 செ.மீ.,யும் இருக்க வேண்டும். இதற்கு நிகரான எடையும் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்களை ஆன்-லைன் முறையில் பதிவு செய்ய வேண்டும். ரூ.100/- விண்ணப்பக்கட்டணமாக செலுத்த வேண்டும். இதனை எஸ்.பி.ஐ., வங்கி கிளையில் சலான் மூலமாகவோ அல்லது ஆன்-லைன் முறையிலோ செலுத்தலாம்.
கடைசி நாள்: 2016 மார்ச் 1.
இணையதள முகவரி: http://crpf.nic.in/recruitment.htm

No comments:

Post a Comment