Monday, 29 February 2016

டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு தமிழக அரசில் பணி

தமிழக அரசில் காலியாக உள்ள Tester பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



விளம்பர எண்: 430/2016

பணி: Tester

பணிக்கோடு: 1905

காலியிடங்கள்: 04

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.5,100

தகுதி: பொறியியில் துறையில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ராணிக்ஸ் பிரிவில் டிப்ளமோ அல்லது டிகிரி முடித்து ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.



பணி: Assistant Tester

பணிக்கோடு: 1908

காலியிடங்கள்: 02

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,400

தகுதி: பொறியியில் துறையில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ராணிக்ஸ் பிரிவில் டிப்ளமோ அல்லது டிகிரி  முடித்து 6 மாத பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 - 35க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 25.06.2016

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். முதல் பதிவு செய்யாதவர்கள் ரூ.50 செலுத்தி முதல் பதிவு செய்துகொள்ள

வேண்டும். கட்டணத்தை 21.03.2016க்கு முன்பாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.tnpscexams.net என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.03.2016

மேலும் விவரங்கள் அறிய www.tnpscexams.net என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Wednesday, 24 February 2016

தனியார் வங்கியில் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

தனியார் துறை வங்கிகளில் ஒன்றான லட்சுமி விலாஸ் வங்கி கரூரை தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது. 1926ல் நிறுவப்பட்டது. 1958 ஆகஸ்டில் ஷெட்யூல்டு வங்கியாக அறிவிக்கப்பட்டது. தற்சமயம் இந்த வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. நவீன மய மற்றும் வாடிக்கையாளரை மையப்படுத்திய சேவைகளுக்காக இந்த வங்கி அனைவராலும் அறியப்படுகிறது. இந்த வங்கியில் காலியாக உள்ள கிளரிக்கல் மற்றும் புரொபஷனரி அதிகாரி காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது: கிளரிக்கல் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 20 முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். புரொபஷனரி அதிகாரி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 20 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: புரொபஷனரி அதிகாரி பதவிக்கு ஏதாவது ஒரு பட்டப்படிப்பை 60 சதவீத மதிப்பெண்ணுடன் முடித்திருக்க வேண்டும். கிளரிக்கல் பணிக்கு இன்ஜினியரிங் அல்லாத பட்டப்பிடிப்பை 55 சதவீத மதிப்பெண்ணுடன் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 
தேர்ச்சி முறை: இரண்டு பதவிகளுக்குமே ஆன்-லைன் முறையிலான எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் தேர்ச்சி இருக்கும். புரொபேஷனரி அதிகாரி பதவிக்கு கூடுதலாக குழுவிவாதம் இருக்கும்.
தேர்வு மையங்கள்: தமிழகத்தின் சென்னை, கோவை, சேலம், மதுரை மற்றும் கரூர் மையங்களில் எழுதலாம். இது தவிர நாட்டின் பல்வேறு மையங்களிலும் இதே தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் 600 ரூபாய்.
கடைசி நாள்: 2016 மார்ச் 1.
முழு விபரங்களுக்குwww.lvbank.com/careers.aspx

Tuesday, 16 February 2016

அணு ஆராய்ச்சி மையத்தில் டெக்னிகல் பணி

இந்திரா காந்தி சென்டர் பார் அட்டாமிக் ரிசர்ச் எனப்படும் ஐ.ஜி.சி.ஏ.ஆர்., மையம் காஞ்சிபுரத்தில் உள்ளது. இங்கு பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள டெக்னிகல் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.
காலியிட விபரம்: டெக்னீசியன் சி பிரிவிலான டிராப்ட்ஸ்மேனில் 2, மேசனில் 4, வெல்டரில் 3, பெயின்டரில் 1, மெக்கானிகல் டிராப்ட்ஸ்மேனில் 5, கம்ப்யூட்டர் ஆபரேட்டர் அண்டு புரொகிராமிங் அசிஸ்டென்டில் 3, கிளாஸ் ப்ளோயரில் 1, பாய்லர் அட்டென்டன்டில் 2 காலியிடங்கள் உள்ளன.
ஸ்டைபண்டரி டிரெய்னி பிரிவில் எலக்ட்ரீசியனில் 36, ரெப்ரிஜிரேஷன் அண்டு ஏ.சி., மெக்கானிக்கில்7, இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக்கில் 16, எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக்கில் 12, பிட்டரில் 42, மில்ரைட் பிட்டரில் 12, மெஷினிஸ்டில் 4, டர்னரில் 4, மெக்கானிகல் மெஷில் டூல் மெயிண்டனென்சில் 3, பயாலஜியில் 3, பிளான்ட் ஆப்பரேட்டரில் 25, லேபரட்டரி அசிஸ்டென்டில் 34 காலியிடங்கள் உள்ளன. டெக்னீசியன் சி பிரிவு பதவிகளுக்கு 27 வயதுக்கு உட்பட்டவராவும், ஸ்டைபண்டரி டிரெய்னி பிரிவு 2க்கு 18 முதல் 22 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: டெக்னீசியன் சி பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் பிளஸ் 2 படிப்பை இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதப் பாடங்களில் குறைந்த பட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். ஐ.டி.ஐ., டிரேடு முடித்த பின்னர் குறைந்த பட்சம் 4 ஆண்டுகள், தொடர்புடைய டிரேடு பிரிவில் அனுபவம் தேவை. ஸ்டைபண்டரி டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் பிளஸ் 2 படிப்பை 60 சதவீத மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். 
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மற்றும் டிரேடு டெஸ்ட் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். 
விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். கடைசிநாள் 2016 மார்ச் 18. 






முழு விபரங்களுக்குhttp://www.igcar.ernet.in/recruitment/

Monday, 8 February 2016

தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கியில் பணி


தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 19 உதவியாளர் பணியிடங்களுக்கு வங்கி விதி மற்றும் அரசு விதிகளின்படி தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது: விண்ணப்பதாரர்கள் 01.01.2015 அன்று 21 வயது பூர்த்தியானவராக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு உச்ச பட்ச வயதில் சில சலுகைகள் உள்ளது. முழு விபரங்களுக்கு இணையதளத்தை பார்க்கவும்.
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
இதனுடன் கூட்டுறவு பயிற்சி அல்லது கூட்டுறவு பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும். கூட்டுறவில் பட்டப்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மூலம் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
விண்ணப்பக் கட்டணம்: தேர்வுக் கட்டணம் 200 ரூபாய். இதனை NEFT முறையிலும் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்ப படிவத்தை www.taicobank.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களை டவுண்லோடு செய்து கொள்ளலாம். விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து, உரிய இணைப்புகளுடன் சேர்த்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள் 2016 பிப்., 15.
Managing Director,
Tamilnadu Indistrial Co-op Bank Ltd.,
No.36, South Channel Canal Road,
Raja Annamalaipuram, Mandavelipakkam,
Chennai 600 028.
http://taicobank.in/Website21012016.pdf

Wednesday, 3 February 2016

சி.ஆர்.பி.எப்.,பில் ஸ்டெனோ ஆக வாய்ப்பு

நமது நாட்டின் முக்கிய துணை ராணுவப் படைகளில் ஒன்றுதான் சி.ஆர்.பி.எப்., எனப்படும் சென்ட்ரல் ரிசர்வ் போலீஸ் போர்ஸ் படை. தேர்தல் உள்ளிட்ட முக்கிய நேரங்களில் இதன் பங்கு அளப்பரியது. நமது நாட்டின் முக்கிய தருணங்களில் சட்டம், ஒழுங்கைக் காப்பதில் இதற்கு தனி இடம் உண்டு. இந்தப் படையில் அசிஸ்டென்ட் சப்-இன்ஸ்பெக்டர் பிரிவைச் சேர்ந்த ஸ்டெனோ பணியிடங்கள் 229ஐ நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது: மார்ச் 2016 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 18 முதல் 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பிளஸ் 2வுக்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும். பத்தாம் வகுப்பை முடித்துவிட்டு 2 அல்லது 3 வருட டிப்ளமோ படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
சிறப்புத் தகுதி: ஸ்டெனோ பதவி என்பதால் இப்பிரிவில் கூடுதல் தகுதி தேவைப்படும். முழுமையான தகவல்களுக்கு இணைய தளத்தைப் பார்க்கவும். உயரத்தை பொறுத்தவரை ஆண் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 165 செ.மீ.,; பெண்கள் 155 செ.மீ.,யும் இருக்க வேண்டும். இதற்கு நிகரான எடையும் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்களை ஆன்-லைன் முறையில் பதிவு செய்ய வேண்டும். ரூ.100/- விண்ணப்பக்கட்டணமாக செலுத்த வேண்டும். இதனை எஸ்.பி.ஐ., வங்கி கிளையில் சலான் மூலமாகவோ அல்லது ஆன்-லைன் முறையிலோ செலுத்தலாம்.
கடைசி நாள்: 2016 மார்ச் 1.
இணையதள முகவரி: http://crpf.nic.in/recruitment.htm