திருப்பூரில் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடத்துக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்தி:
திருப்பூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடத்துக்கு கீழ்கண்ட தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் (முன்னுரிமையற்றோர்) பிரிவைச் சேர்ந்த எட்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்ற இலகு ரக ஓட்டுநர் உரிமம் மற்றும் பேட்ஜ் பெற்ற 18 வயது முதல் 32 வயதுக்கு உள்பட்ட ஆண்கள் வரும் ஜூலை 10-ஆம் தேதிக்குள் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் தங்களது சுய விவரங்கள், சான்று நகல்களுடன் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment