Thursday, 16 June 2016

நாமக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் பணி

நாமக்கல் மாவட்ட குற்றவியல் நீதித்துறையில் தமிழ்நாடு அடிப்படையில் காலியாக உள்ள கீழ்வரும் பதவிகளுக்கு பணி நியமனம் செய்யும்பொருட்டு தகுதி தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு இன சுழற்சி அடிப்படையில் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

விண்ணப்பதாரர்கள் உரிய சான்றிதழ்களின் நகல்களை சுய சான்றொப்பத்துடன் இணைத்து பதிவு அஞ்சலில் (ஒப்புகை அட்டையுடன்) அனுப்ப வேண்டும். சான்றிதழ்களின் சரி பார்த்தலின் அடிப்படையில் தகுதித் தேர்வுக்கு இந்நீதிமன்ற இணையதள வலைதளத்தின் மூலம அழைக்கப்படுவோர் மட்டும் நேரில் கலந்து கொள்ளவும்.
அனைத்து பதவிகளுக்கும் வயதுவரம்பு 01.06.2016 தேதியின்படி கணக்கீடப்படும்.
பதவி: அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1300
தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி
இலகு மற்றும் கனபர வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கும் விண்ணப்பதாரருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

பதவி: இரவுக் காவலர்
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1300
தகுதி: தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

பதவி: மசால்ஜி
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,300
தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.06.2016
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர்,
தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம், நாமக்கல்
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
 என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.


No comments:

Post a Comment