Thursday, 23 June 2016

ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

திருப்பூரில் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடத்துக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்தி:
திருப்பூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடத்துக்கு கீழ்கண்ட தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் (முன்னுரிமையற்றோர்) பிரிவைச் சேர்ந்த எட்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்ற இலகு ரக ஓட்டுநர் உரிமம் மற்றும் பேட்ஜ் பெற்ற 18 வயது முதல் 32 வயதுக்கு உள்பட்ட ஆண்கள் வரும் ஜூலை 10-ஆம் தேதிக்குள் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் தங்களது சுய விவரங்கள், சான்று நகல்களுடன் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, 16 June 2016

நாமக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் பணி

நாமக்கல் மாவட்ட குற்றவியல் நீதித்துறையில் தமிழ்நாடு அடிப்படையில் காலியாக உள்ள கீழ்வரும் பதவிகளுக்கு பணி நியமனம் செய்யும்பொருட்டு தகுதி தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு இன சுழற்சி அடிப்படையில் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

விண்ணப்பதாரர்கள் உரிய சான்றிதழ்களின் நகல்களை சுய சான்றொப்பத்துடன் இணைத்து பதிவு அஞ்சலில் (ஒப்புகை அட்டையுடன்) அனுப்ப வேண்டும். சான்றிதழ்களின் சரி பார்த்தலின் அடிப்படையில் தகுதித் தேர்வுக்கு இந்நீதிமன்ற இணையதள வலைதளத்தின் மூலம அழைக்கப்படுவோர் மட்டும் நேரில் கலந்து கொள்ளவும்.
அனைத்து பதவிகளுக்கும் வயதுவரம்பு 01.06.2016 தேதியின்படி கணக்கீடப்படும்.
பதவி: அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1300
தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி
இலகு மற்றும் கனபர வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கும் விண்ணப்பதாரருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

பதவி: இரவுக் காவலர்
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1300
தகுதி: தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

பதவி: மசால்ஜி
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,300
தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.06.2016
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர்,
தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம், நாமக்கல்
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
 என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.


Monday, 13 June 2016

ரப்பர் கழகத்தில் உதவியாளர், அதிகாரி பணி

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு ரப்பர் கழகத்தில் காலியாக உள்ள அதிகாரி மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Industrial Relations Officer
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100 + தர ஊதியம் ரூ.5,400
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சட்டத்துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Junior Engineer (Electrical)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 -34,000 +தர ஊதியம் ரூ.4,400
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் இஇஇ பிரிவில் டிப்பளமோ அல்லது பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Junior Assistant
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தரஊதியம் ரூ.2,400
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழ் பேச, எழுத தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தங்களது முழுவிவரம் அடங்கிய பயோடேட்டாவை ஏ4 அளவு வெள்ளைத்தாளில் தட்டச்சு செய்து அதனுடன் அட்டெஸ்ட் செய்யப்பட்ட சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Managing Director, Arasu Rubber Corporation Limited, Nagarcoil – 629 001
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 13.06.2016

Friday, 10 June 2016

பட்டதாரிகளுக்கு விமானப்படையில் பணி


நாட்டின் முப்படை ராணுவ பிரிவுகளில் ஒன்றாக விளங்கும் விமானப்படையில் காலியாக உள்ள கமிஷன்டு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய ஆண்,பெண் பட்டதாரி இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அப்கேட் (AFCAT  2/2016) என்ற தேர்வு மூலம் பிளையிங், டெக்னிக்கல், கிரவுண்ட் டியூட்டி ஆகிய பிரிவுகளில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

வயது வரம்பு: 02.07.1993 மற்றும் 01.07.1997 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பதாரர்கள் பிறந்திருக்க வேண்டும். இந்த தகுதித் தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்களே.
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட பிரவுகளில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: சம்மந்தப்பட்ட பணிக்கான உயரம், எடை, மார்பளவு, பார்வைத்திறன் மற்றும் உடல்- உள நலம் பெற்றிருக்க வேண்டும். ஸ்டேஜ்-1, ஸ்டேஜ்-2 என இரு நிலைகளில் தேர்வுகள் நடைபெறும். விமானப்படை பொது சேர்க்கைத் தேர்வு (அப்கேட்) எனப்படும் எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல், உடற்தகுதி, உடற்திறன் சோதித்தல், உளவியல் தேர்வு, குழுத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். அனைத்து நிலையிலும் தேர்ச்சி பெறுபவர்களுக்கு குறிப்பிட்ட காலம் பயிற்சி அளிக்கப்படும். பின்னர் பணி நியமனம் பெறலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.careerairforce.nic.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.06.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.careerairforce.nic.in  என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Monday, 6 June 2016

மின்வாரியத் தேர்வுக்கான மறுதேதி அறிவிப்பு

மின்சார வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக நடைபெறும் தேர்வுக்கான மறுதேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலமாக நடத்தப்படும் இந்தத் தேர்வுகள், கடந்த 22-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால், தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. தற்போது தேர்வு நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தட்டச்சர், இளநிலை தணிக்கையாளர், உதவி வரைவாளர் ஆகிய பணியிடங்களுக்கு ஜூன் 19-ஆம் தேதியும், இளநிலை உதவியாளர், வேதியியல் பரிசோதகர், களப்பணி உதவியாளர் (பயிற்சி) சுருக்கெழுத்தர் ஆகிய பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 27-ஆம் தேதியும், இளநிலை உதவியாளர் (நிர்வாகம்), தொழில்நுட்ப உதவியாளர் (மின்னியல், இயந்திரவியல்) ஆகிய பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 28-ஆம் தேதியும் தேர்வு நடைபெறவுள்ளது.
குறிப்பிட்ட 6 பதவிகளுக்கு 31 மையங்களில் நடைபெறுவதாக இருந்த தேர்வு 8 மையங்களாக குறைக்கப்பட்டுள்ளது. மையங்கள் குறித்த விவரங்கள், தேர்வுக்கான கால அட்டவணை ஆகியவற்றை www.tangedco.gov.in, tangedco.directrecruitment.in ஆகிய இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம்

Saturday, 4 June 2016

கேரள நிதி நிறுவனத்தில் மேலாளர் பணி

கேரள அரசின் நிதி நிறுவனமான Kerala Financial Corporation (KFC) -ல் காலியாக உளள Manager, System Analyst பணியிடங்களுக்கான அறிவிப்வை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Manager
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.37,000-59,400
வயது வரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.
பணி: System Analyst
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.32,000-56,000
வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
The General Manager (A&C),
Kerala Financial corporation,
Thiruvananthapuram.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.06.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://kfc.org/documents/Applications-invited-for-the-post-of-System-Analyst-and-Manager.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்

Wednesday, 1 June 2016

தூத்துக்குடி துறைமுகத்தில் பணி


தூத்துகுடி துறைமுகத்தில் நிரப்பப்பட உள்ள Tug Master பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கல் வரவேற்கப்படுகின்றன.
பணி: Tug Master
சம்பளம்: மாதம் ரூ.23,600-56,300
காலியிடங்கள்: 02
வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
The Deputy conservator, V.O.Chidambarnar port trust, Tuticoorin:-628004.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 04.06.2016
மேலும் கல்வித் தகுதி உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய  http://www.vocport.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.