Monday, 11 July 2016

தேசிய சுகாதார மிஷனில் 1800 பணி: பார்மசி, மருத்துவம் முடித்தவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

ஆந்திர தேசிய சுகாதார மிஷனில் (National Health Mission Andhra Pradesh (NHM)  2016 – 2017-ஆம் ஆண்டிற்கான 1800 மருத்துவ அதிகாரி, ஆயுஷ் மருத்துவ அதிகாரி, மருந்தாளுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: National Health Mission Andhra Pradesh (NHM)
பணி இடம்: ஆந்திர பிரதேசம்
மொத்த காலியிடங்கள்: 1800
பணி – காலியிடங்கள் விவரம்:
1. MBBS Medical Officer (Male) – 336
2. MBBS Medical Officer (Female) – 339
சம்பளம்: மாதம் ரூ.33,000
3. AYUSH Medical Officer (Male) – 113
4. AYUSH Medical Officer (Female) – 450
சம்பளம்: மாதம் ரூ.22,000
5. ANM – 450
6. Pharmacist – 450
சம்பளம்: மாதம் ரூ.10,000
தகுதி: பார்மசி பிரிவில் டிப்ளமோ மற்றும் எம்பிபிஎஸ் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 01.07.2016 தேதியன்படி 18 – 44க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான http://cfw.ap.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்று செய்து அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 12.07.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://cfw.ap.nic.in/pdf/RBSK%20Mobile%20health%20teams%20recruitment%20Guidelines.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Thursday, 7 July 2016

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் பொறியாளர், எச்.ஆர் பணி


மத்திய அரசு நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் 2016 – 2017-ஆம் ஆண்டிற்கான 29 பொறியாளர், சந்தையியல் அதிகாரி, சட்ட அதிகாரி, மனிதவள அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் அனுபவம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 29
பணி இடம்: சென்னை
பணி – காலியிடங்கள் விவரம்:
பணி: Engineer (Chemical) – 14
பணி: Engineer (Mechanical) – 05
பணி: Engineer (Electrical) – 02
பணி: Engineer (Civil) – 02
பணி: Engineer (Metallurgy) – 02
பணி: Marketing Officer – 02
பணி: Human Recourse Officer – 01
பணி: Law Officer – 01
தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் முதல் வகுப்பு பட்டம் பெற்று போதிய பணி அனுபவமும் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 31.07.2016 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.24,900 – 50,500
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.300, மற்ற பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ www.cpcl.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்று செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
Chennai Petroleum Corporation Limited,
Post Box No. 99, GPO, Kolkata 700001
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.07.2016
ஆன்லைன் விண்ணப்பப் பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 03.08.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.cpcl.co.in/Recruitment_2016/(Annex-I)%20Advertisement%20for%20Web-site.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Wednesday, 6 July 2016

திருவண்ணாமலையில் ஆகஸ்ட 19-இல் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு

திருவண்ணாமலையில் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் ஆகஸ்ட் 19-இல் தொடங்கி, 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

ராணுவத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு நபர்களைத் தேர்வு செய்யும் வகையிலான இந்த முகாம் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது.
சென்னை, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தோரும், புதுச்சேரியைச் சேர்ந்தோரும் பங்கேற்கலாம்.
தங்களது பெயர் விவரங்களை http:joinindianarmy.nic.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களை, இந்திய ராணுவத்தின் அதிகாரபூர்வ “”யூ- டியூப்பில்” பார்வையிடலாம் என அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.