Wednesday, 25 May 2016

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் மருந்தாளுநர் பணி: 27-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு





பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள மருந்தாளுநர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Pharmacist B
தகுதி: +2 முடித்த பிறகு, Pharmacy படிப்பில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். அத்துடன், 3 மாதங்கள் பயிற்சி பெற்று மாநில அல்லது மத்திய பார்மஸி கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200
காலியிடங்கள்: 02
வயது வரம்பு: 18-லிருந்து 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணி: Technician D
தகுதி: +2 முடித்த பிறகு, டென்டல் டெக்னீசியன் படிப்பில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200
காலியிடங்கள்: 02
வயது வரம்பு: 18-இலிருந்து 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர் ரூ.100ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். பிற்படுத்தப்பட்டோர்/பழங்குடியினர்/மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: https://barcrecruit.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 27.05.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://barcrecruit.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Friday, 13 May 2016

நூலகர் பணி: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்பட உள்ள நூலகர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


அறிக்கை  எண்.9/2016 தேதி: 25.04.2016

பணி: Librarian   in   Tamil   Nadu Public Service Commission
(2008-2015) (Code No.2057)

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100 + தர ஊதியம் ரூ.5,400

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் மற்றும் நூலகத் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2016 தேதியின்படி 18 – 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வுக் கட்டணம்: ஒரு முறை ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.50. தேர்வுக் கட்டணம் ரூ.125

விண்ணப்பிக்கும் முறை: www.tnpscexams.net / www.tnpscexams.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.05.2016
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 26.05.2016
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 17.07.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/2016_09_not_eng_Librarian_TNPSC_new.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.