Sunday, 24 April 2016

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய அணுமின் கார்ப்பரேஷனில் பணி

இந்தி அணுமின் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் (NPCIL)   டிரெய்னி பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.NPCIL/HRM/ET/2016/03
நிறுவனம்: Nuclear Power Corporation of India Limited
பணி: Executive Trainee
காலியிடங்கள் எண்ணிக்கை: 183
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Mechanical – 75
2. Electrical – 32
3. Electronics – 26
4. Chemical – 28
5. Instrumentation – 12
6.  Industrial & Fire Safety – 10
வயதுவரம்பு: 15.05.2016 தேதியின்படி 26க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Mechanical, Electrical, Electronics, Chemical, Instrumentation, Industrial & Fire Safety போன்ற துறைகளில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.npcilcareers.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.05.2016


Monday, 18 April 2016

இந்திய அஞ்சல் துறையில் 374 பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய அஞ்சல் துறையின் மத்தியப் பிரதேசம் அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள 374 தபால்காரர், மின்னஞ்சல் காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: Postman, Mail Guard
காலியிடங்கள்: 374
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,000
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் மெரிட் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.05.2016
மேலும் முழுமையான விவரங்கள் கீழே கொடுக்கபட்டுள்ளது 















Friday, 15 April 2016

பண்டக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு மெடிக்கல் கம்பெனி என்சிசி அலுவலகத்தில் உள்ள பண்டக உதவியாளர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதற்கு விண்ணப்பிப்போர் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இருபாலரும் விண்ணப்பிக்கலாம். 18 வயது முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதியுள்ள நபர்கள் தங்கள் பெயர், கல்வித் தகுதி, ஜாதி சான்றுகளுடன் வீட்டு முகவரி, தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களுடன் பதிவுத் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். விண்ணப்பங்கள் ஏப்.22 ஆம் தேதிக்குள் தமிழ்நாடு மெடிக்கல் கம்பெனி என்சிசி, மருத்துவக் கல்லூரி வளாகம், மதுரை என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.