Friday, 22 January 2016

தமிழகத்தின் தென் கோடியில் உள்ள தூத்துக்குடி துறைமுகம் பிரசித்தி பெற்றது. கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் பெயரால் இது அழைக்கப்படுகிறது. இந்தத் துறைமுகத்தில் காலியாக உள்ள அப்ரென்டிஸ் டிரெய்னிங் பிரிவிலான பல்வேறு இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.

காலியிட விபரம்: மெக்கானிக்கல் கிராஜூவேட் அப்ரென்டிசில் 4ம், மெக்கானிக்கல் டெக்னீசியன் அப்ரென்டிஸில் 15ம், டீசல் மெக்கானிக்கில் 3ம், எலக்ட்ரீசியனில் 5ம், மோட்டார் வெகிக்கிள் மெக்கானிக்கில் 3ம், போர்ஜர் அண்டு ஹீட் டிரீட்டர், ஷீட் மெட்டல் ஒர்க்கர் ஆகியவற்றில் தலா 1ம், மெக்கானிக்கல் டிராப்ட்ஸ்மேனில் 2ம், பி.ஏ.எஸ்.எஸ்.ஏ.,வில் 5ம் காலியிடங்கள் உள்ளன.
தேவைகள்: மெக்கானிக்கல் கிராஜூவேட் அப்ரென்டிஸ் பிரிவுக்கு மெக்கானிக்கலில் பட்டப் படிப்பும், மெக்கானிக்கல் டெக்னீசியன் அப்ரென்டிஸ்ஸூக்கு மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் டிப்ளமோ படிப்பும், இதர பிரிவுகளுக்கு பத்தாம் வகுப்பு படிப்புடன் தொடர்புடைய டிரேடு பிரிவில் ஐ.டி.ஐ., தகுதியும் தேவைப்படும்.
முழுமையான தகவல்களை இணையதளத்தில் இருந்து அறியவும்.
விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான படிவத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளைச் சேர்த்து பின்வரும் முகவரிக்கு 30.1.2016க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
The Chief Mechanical Engineer, V.O. Chidambaranar Port Trust, Tuticorin - 628 004.
இணையதள முகவரி: http://www.vocport.gov.in/port/userinterface/Recruitment.aspx

Monday, 4 January 2016

தமிழக மின்வாரியத்தில் இன்ஜினியரிங் பணி



தமிழ் நாடு ஜெனரேஷன் அண்டு டிஸ்டிரிபியூஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் நம்மால் டான்ஜெட்கோ என்ற பெயரால் பெரிதும் அறியப்படுகிறது. மின் உற்பத்தி மற்றும் பகிர்மானத்தில் ஈடுபட்டு வரும் இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் தமிழ் நாடு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். மேலும் ஒரு வருட கால கிராஜூவேட் அப்ரென்டிஸ்ஷிப் பயிற்சியை டி.என்.இ.பி., டான்ஜெட்கோ, டான்டிரான்ஸ்கோ வாயிலாக முடித்தவர்களும் இந்தப்
பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
காலியிட விபரம்: எலக்ட்ரிகல் துணைப் பொறியாளர் பதவியில் 300 இடங்களும், மெக்கானிகல் துணைப் பொறியாளர் பிரிவில் 25 இடங்களும், துணைப் பொறியாளர் சிவில் பிரிவில் 50 இடங்களும் சேர்த்து மொத்தம் 375 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: எலக்ட்ரிகல் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் இ.இ.இ., இ.சி.இ., இ.ஐ.இ., சி.எஸ்.இ., ஐ.டி., போன்ற ஏதாவது ஒரு பிரிவில் இன்ஜினியரிங் பட்டப் படிப்பையோ முடித்திருக்க வேண்டும். அதே போல் சிவில் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் சிவிலில் இன்ஜினியரிங் பட்டப் படிப்பையும், மெக்கானிக்கலுக்கு விண்ணப்பிப்பவர்கள் இதே பிரிவில் பட்டப் படிப்பையும் முடித்திருக்க வேண்டும். இப்பிரிவுகளுக்கு ஏ.எம்.ஐ.இ., செக்சன் ஏ மற்றும் பி முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களுக்கு தமிழ் மொழியறிவு கட்டாயம் தேவை.
விண்ணப்பக் கட்டணம்: டான்ஜெட்கோவின் மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க ரூ.500/-ஐ கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் ரூ.250/- மட்டும் செலுத்தினால் போதுமானது. முழுமையான தகவல்களை இணையதளத்திலிருந்து பெறவும்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மூலமாக தேர்ச்சி இருக்கும். எழுத்துத் தேர்வை தமிழ் நாட்டின் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, வேலூர், விழுப்புரம், ஈரோடு, திரு நெல்வேலி ஆகிய மையங்கள் ஏதாவது ஒன்றில் எதிர்கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்களை ஆன்-லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 11.01.2016
இணையதள முகவரி: http://www.tangedco.gov.in/index1.php?tempno=1